வெளிகள் ஆயிரம் கோணங்கள் பல்லாயிரம்

தேவனின் வார்த்தைகளை விட சாத்தானின் வார்த்தைகளே  இங்கே அதிகம் ஈர்ப்புடையவை. இல்லையெனில், தம்மைச் சூழ்ந்திருக்கும் நற்கனிகளை விளைப்போரையெல்லாம் புறமொதுக்கித் தள்ளிவிட்டு, காயடிப்போரைத் தோளில் தூக்கிச் சுமக்குமா ஈழத் தமிழ்ச் சமூகம்? ஈழ விடுதலைப் போராட்டத்திலும் சமூக விடுதலைப் போராட்டத்திலும் ஏன் இலக்கியத்திலும் கூட அத்தகைய நல்ல வித்துகளும் நல்விளைவுக்கான முயற்சிகளும் இருந்தன; இருக்கின்றன. அவற்றை ஏற்று முன்கொண்டு செல்வதை விட, அவற்றுக்கு ஆதரவளித்துப் பலமாக்குவதை விட, எதிர்ச்சக்திகளின் மீது மோகம் கொண்டதே விதியானது. என்பதால்தான் எத்திசையின் பயனுறு வார்த்தைகளும் வெறும் சருகாகிப் புறமொதுங்கின. நடேசன் இங்கே முன்வைத்துப் பேசும் பிரதிகளிற் பலவும் தேவ வாக்கைத் தம்முள் கொண்டமைந்தவை. ஆயினும் தமிழ்ப் பெருந்திரளோ அவற்றைத் ‘தொட்டாற் சுடும்’என்று கருதி முகச்சுழிப்போடு விலக்கம் செய்து வருகிறது. சிறிய வட்டங்களே அவற்றைப் பேசியும் வாதிட்டும் முன்னெடுத்துச் செல்கின்றன.

மேலும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டமும்

“பயங்கரவாதத்தைக் கையாளுவதற்கு கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் வேறு பல சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன என்று தாங்கள் நெடுகவும் கூறிவந்ததை ஜே.வி.பி. தலைவர்கள் மறந்துவிட்டார்கள் போன்று தோன்றுகிறது.”

மேலும்

மட்டக்களப்பு: இரு பேரலைகளை தாண்டிய படகு…..!(வெளிச்சம்:057)

“கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, முஸ்லீம் காங்கிரஸ் என்பன மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த நிலையில்  இரண்டு பெரும், குறும் தேசிய பேரலைகளையும் தாண்டி படகு முன்னேறியிருக்கிறது. அதுவும் பிள்ளையான் கைது செய்யப்பட்டு பல்வேறு  கதைகளும், சந்தேகங்களும் அரசியல் காரணங்களுக்காக பரப்பப்படுகின்ற இன்றைய சூழலில் பிள்ளையான் உள்ளே இருந்தால் என்ன? வெளியே இருந்தால் என்ன அவர் எங்கள் மனச்சிறையில் இருக்கிறார் என்பதாக இந்த வாக்குப்பதிவு அதிகரித்திருக்கிறது.”

மேலும்

உள்ளூராட்சித் தேர்தலில் தொங்கும் உறுப்பினர்கள். Over Hang members. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொங்கு நிலை உறுப்பினர்கள் என்றால் என்ன?
நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்களிலும் பார்க்க தெரிவில் அதிகரிப்பது எப்படி?

மேலும்

உள்ளூராட்சி…

“தேர்தல் வேட்பாளர்களால் வழங்கப்படும் வாக்குறுதிகள் உள்ளூராட்சி முறையை சரியாக புரிந்துகொண்டு வழங்கப்பட வேண்டும்.

இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் அந்த வட்டாரத்திற்கு தான்தான் சகலதும் என நினைப்பதும், தன்னால் எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்று வேட்பாளர்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பது வேடிக்கையாக இருக்கின்றது.”

மேலும்

உயிரின் கண்ணீர்த்துளி உலகின் இரத்தத் துளி

“1980 களின் முற்பகுதியில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் மொழிபெயர்த்த ‘பலஸ்தீனக் கவிதைகள்‘ தமிழ்ப்பரப்பில் உண்டாக்கியதையும் விடக் கூடிய கனத்தை, வலியை, வலிமையை இந்த மரித்தோர் பாடல்களில் காணலாம். இங்கே உள்ளவை ஒவ்வொன்றும் நம்முடைய உயிரில் அதிர்வை உண்டாக்குவன. அத்தனையும் சாட்சியமானவை.ஒவ்வொருவருடைய இறுதிக்கணச் சாட்சியங்கள். நிகழ் உண்மைகள். பலஸ்தீனக் கவிதைகள் அன்றைய நிலையில், போராட்டத்துக்கான பெரும் பங்களிப்பென்றால், இது இன்றைய சூழலில், மக்களின் மீதான அழிவுத் தாக்குதலில் பெரும் சான்றுத்துணையாகும்.”

மேலும்

பெண் வேட்பாளர்கள்:  கறிவேப்பிலையும், போடுகாயும் ….! (வெளிச்சம்: 055)

“இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில், இன்று இருக்கின்ற 22  பெண் பாராளுமன்ற உறுப்பினர்களில்   வடக்கு கிழக்கில் இருந்து தமிழ்த்தேசியம், விடுதலை, தேசத்திரட்சி என்று பேசுபவர்கள் பாராளுமன்றம் அனுப்பியுள்ள பெண்கள்   எவரும் இல்லை. இவர்கள் கூறுகின்ற தேசத்திரட்சி  பெண்கள் இல்லாத ஆண்களின் திரட்சியா? வடக்கு கிழக்கில் தமிழ் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?  சனத்தொகை வீதாசாரத்தில் பெண்களின் பங்கு எவ்வளவு ? பெண்களுக்குரிய  பங்கை ஏப்பம் விட்டிருப்பவர்கள் யார்?  இந்த ஏப்ப அரசியலுக்கு உரிமைப்போராட்டம் என்ற ‘முலாம்’ வேறு. தமிழ்க் கட்சிகளின் இந்த “போடுகாய்”, “கறிவேப்பிலை” அரசியல்  உள்ளூராட்சி சபைகளிலும் தொடரப்போகிறது.”

மேலும்

கவனம் : பொய் வாக்குறுதிகளுடம் தகுதியற்ற வேட்பாளர்கள்!

‘அரசியலிலும், தனி வாழ்க்கையிலும் நம்பிக்கை அளித்தலுக்கு (Giving hope) நிகரானது அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதாகும் (Fulfilling hope). அரசியலில் இது இன்னும் கூடுதல் அழுத்தத்துக்குரியது. ஏனென்றால், அரசியலில் அளிக்கப்படும் நம்பிக்கை, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அளிக்கப்படுவது. அவர்களுடைய நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அளிக்கப்படுவது.’

மேலும்

“மாற்று அரசியலுக்கான களமாக உள்ளூராட்சி தேர்தல்” – கோபாலகிருஸ்ணன்

“வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் அவாவி நிற்கும் மாற்று அரசியலுக்குத் தயாராவதற்கான மார்க்கம் உள்ளூர் அதிகாரசபைகளின் நிர்வாகத்தை ஒரு தனிப்பட்ட கட்சியிடம் ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டு வாக்களிக்காமல் கட்சி மற்றும் தனிநபர் நலன், தலைமைத்துவ விசுவாசம், பதவி மோகம் என்பவற்றுக்கப்பால், உண்மையும் நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் முழுக்க முழுக்க மக்கள் நலன்களை மட்டுமே இலக்காகக் கொண்டு உழைக்கக் கூடிய வேட்பாளர்களைத் தெரிவுசெய்ய வேண்டும்”

மேலும்

உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும் 

“எதிர்க்கட்சிகள் இத்தகையதொரு குழப்பமான நிலையில் இருப்பது ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பாக இருக்கின்ற போதிலும், ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும்,  நடைமுறைச் சாத்தியத்தைப்  பற்றி சிறிதேனும்  சிந்திக்காமல் அள்ளிவீசிய எண்ணற்ற வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருப்பதால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்  ஏமாற்றமும் விரக்தியும்  உள்ளூராட்சி தேர்தல்களில் கணிசமானளவுக்கு  பிரதிபலிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.”

மேலும்

1 2 3 158